சுதந்திரம்

சுதந்திரமாய் திரிந்த என்னை 
 பூவேலி  கொண்டு அடைதாயே..!

 உயிர் பசியை தேடி அலைந்தேன் 
 உள்ளுக்குள்ளே சிறை பட்டு தவித்தேன் !

 காரணமே இல்லாமல் சாவியை தேடினேன்   
  உன் இதய பூவேலிக்குள், 

வெளியில் இருந்த சுதந்திரத்தை விட 
 உன் வேலிக்குள் நான் சுகமாய்... 

உறங்கவில்லை 
உயிர் கொடுத்தேன்!  உனக்காக ........

பொறாமை

       உன்னுள் உணர்ந்த என் 
         பரும கன்னங்களை கண்டு 
                நான் பொறாமை படுகிறேன் !
  எத்தனை முத்தம் வாங்கியிருக்கும் உன்னிடம் இருந்து ? 

அம்மாவுக்காக நான்

அம்மா 
        நீ என்னை சுமந்த பிறவி பலனுக்காக 
  நான் உனது செருப்பாக பிறக்க வேண்டாம் .
         அவை வெறும் ஆறு மாதம் மட்டுமே உன்னை சுமக்கும் ..

 நான்  உனது மூக்கு'ஆக பிறக்க வேண்டும் 
         உனக்காக நான் சுவாசிப்பதற்கு ....      

தேடுங்கள் தூக்கத்தை அல்ல வாழ்கையை ..!


அதிக நேரம் தூங்குவது  நல்லது அல்ல ,  
   ஒருவன் சராசரியாக 6 மணிநேரம் தூங்கலாம் . அதற்கு மேல் துங்குவது  உடலுக்கு சோர்வு அளிக்கும் . 
  
 நீண்ட நேரம் துன்குவதால் நமது உடல் சோர்வு ஆகிவிடும் . அதன் பக்கவிளைவாக  இதயம் பாதிக்க படும் . கண்ணுக்கு கீழே பழுத்து பெரிதாகிவிடும் , அது உங்களது அழகை கெடுக்கும் .

    துங்கும் போது வலது புறமும் , மேல் நோக்கியே படுக்கவேண்டும்  . இடது புறமும் கீழ் நோக்கியே படுத்தால்  இதயத்துக்கு பாதிப்பு உண்டாகும் .

   நீண்ட நேரம் துன்குவதால் அதிகமாக தலைவலி உண்டாகும் .மன அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கு  இதுவே முக்கிய காரணம்.

  துங்கும் போது  நமது கை , கால்கள் , முதுகு , மார்பு  இவைகள்  
 கட்டுப்பட்டு இருக்கும் . அதிக நேரம் தூங்கும்போது இவைகள்  எப்போதுமே சோம்பேறித்தனமாக மாறிவிடும் . 
  
  ஒருவன் வெற்றியை நோக்கும்போது தூக்கம் வராது . வாழ்கையில் தேடல் மிக முக்கியானது !.  தேடுங்கள் தூக்கத்தை அல்ல வாழ்கையை ..!          

என் தாய் மண்

                      பிறந்த உடன் உன் மடியில் விழுகிறேன் 

                   என் தாய் மடியில் உறங்கியதை விட 
                          உன் மடியில்தான் அதிகம் உறங்கினேன் .

                 எனக்கு யாரும் இல்லாத நிலையில் 
                        எனக்காவும் நீ இருக்கிறாய் என்ற 
                                 நம்பிக்கை எனக்கு இருந்தது !
                            

                  உன் மேல் போடும் ஆட்டங்கள் பல 
                          உன்னால் போடும் சண்டைகள் சில ..

                 என் கண் அழகுக்காக உன்னால் 
                       மலரபட்ட ரோஜா செடிகளையும் 
                            மல்லிகை செடிகளையும் கண்டு 
                       என் கண்கள் உன்மேல் விளையாடுகிறது ..

                 சாதனைகளும் சோதனைகளும் வந்தாலும்  
                               உன் மடியில் சாய்கிறேன் ..

                  நான் தடுமாறி கீழே விழும்போது 
                          நீ என்னை தாங்கி  பிடிக்கிரையே 

                  உனக்கும் எனக்கும் என்ன சொந்தமோ                
                                             தெரியவில்லை !
                     நான் போடும் ஆட்டங்களையெல்லாம்  
                                  பொருத்து கொண்டு  கடைசியில் 
           என்னை உன் அடியிலே உறங்க வைக்கிறாயே ..   

அடிமை

ஒருவன் அமைதியாக இருக்கும் போது கூட 
                      அந்த அமைதிக்கு அவன் அடிமையாகிறான் !



பார்க்கும் பார்வையிலே உன்னை 
கொள்ள தெரிந்த எனக்கு 
உன் பேச்சிலே நான்அடிமையாகிறேனடி .. !


குறைந்த ஊதியத்திற்கு ஒருவன்  வேலைக்கு 
செல்கிறான் என்றால்,
 அவன் அங்கே அடிமையாக இருக்கிறான்... 

காதல் ஒரு ஆயுள் தண்டனை

தேடினேன் தேடினேன்..       
 கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை தேடினேன்

 நீ என் இதயத்துக்குள் இருப்பது  தெரியாமல் 


காரணமே இல்லாமல் சண்டை போடுவது 

 உன்னை வெறுபேத்துவதற்குஅல்ல

உன்னிடம்  மனம் விட்டு 

பேசுவதை விட 

சண்டை போடும் சுகம்தான்  அதிகம்.. 



உன்னை காதலித்த பாவத்திற்கு எனக்கு 
    ஆயுல் தண்டனை கொடுத்தாயே ..!
என்னை காதலித்த பாவத்திற்கு 
  ஏன் உனக்கு தூக்கு தண்டனை கொடுக்ககூடாது  ?  

மாங்கல்யம்

என் மனதில் ஒரு சந்தோஷம் புன்னகை , புது வாழ்வு அமையபோகுதுங்குற பெருமை. எனக்குள்ளே ஒரு புதிய உலகம் பிறந்தது போல ஒரு தைரியம். எனக்காகவும்  ஒருத்தி இருக்கிறாள் என்ற திமிரு . இன்னும்  15 நாட்களில் எனக்கு கல்யாணம், ரொம்ப விசேஷமாக  நடக்கனும்னு எதிர்பத்த கல்யாணம்.

            ஒருபுறம் ஏக்கமும்கூட , எனக்கு வயது ஆயிருச்சோங்கிற ஏக்கம் , என தோல் சுரின்கிருசேங்கிற ஏக்கம் வந்தது , 
         
         பரவாயில்லை நடக்கபோவது 60-வது கல்யாணம்தானே , தோல் சுருங்கினாதான் 60-வது கல்யாணக்கலை   வரும் !   மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டேன்.

     என்னவள் என் அருகில் இருந்திருந்தால் எங்களுக்கு இன்னும் 15 நாள்களில் 60-வது கல்யாணம் . 

 மனதுக்குள்ளே மாங்கல்யம் பாடினேன் , மனதுக்குள்ளே சந்தோஷமும் பட்றேன் . நிஜ வாழ்கையில் இல்லை .
 
   
    இந்த 60-வது வயதிலாவது என்னை உன்னிடம் கூட்டி செல்வாயா.....  

                                                                  .......வாழ்கிறேன் நான் ..........   

பிச்சை

சாலையோரத்தில் இருந்து
  காசு கேட்கிறீர்களே !
நீங்களும் பிச்சைகாரர்கள்தானோ  ?



திருட்டை தடுக்க கட்டிடம் கட்டி
  திருடுறீர்களே
நீங்களும் கொள்ளைகாரர்கள்தனோ ?


http://www.chennaiblogs.in/2014/06/chennai-traffic-police-corruption-50rs-for-no-licence/

பிரிவு

நெருங்கினால் விலகிறாய்
               விலகினால் நெருங்கிறாய் 
 நீ என்ன தேய்பிறையா ?
           இல்லை வளர்பிறையா  ?
    
உனக்கென ஒருவர் இல்லாமல் போனாலும் 
  உனக்கென  நான் இருக்கேன் !
நமக்கென இருக்கிற ஆகாயம்,பூலோகம் நம்மை விட்டு போய்விடுமோ ?
    நாம் இறந்தால் மட்டுமே நம்மை விட்டு போகும் !
 அப்போதுகூட என்னோடு இருந்து 
   உன்னை  வழி அனுப்பும் என்று  நினைத்துதான் 
     நான் உன்னை விட்டு பிரிகிறேன் ...  





 http://vatamilan.blogspot.in/2014/09/blog-post_27.html

அனுபவம்

ஆயிரம் உறவுகள் நம்மை தேடி வந்தாலும் நமக்கு பிடித்த உறவினை நாம்தான் தேடி செல்ல வேண்டும் !


உன்னை மற்றவர்கள் புரிந்துகொள்ளும்வரை  பொறுமையாய் இரு !
எளிதில் புரிந்து கொள்பவர்க்கு உன்னை பற்றி முழுமையாக தெரியாது !

    
அழகை ரசி, அடைய நினைக்காதே ! 
அழகாக இருப்பவர்களெல்லாம் நல்லவர்களும் கிடையாது !


வறுமைகள் வரும்போது சொந்தங்கள் நெருங்குவதில்லை !
சொந்தங்கள் நெருங்குது என்றால் அங்கெ வறுமைகள் இல்லை ..


உயிர் பிரியும் நேரத்தைவிட
   உண்மையான உறவு   பிரியும் நேரம் கொடுமையானது ! 


சந்தேக சன்னலை பூட்டிவிடு 
  நீ சத்திய பாதையில் நடந்திடு !


காலங்கள் தேய்திடலாம்,
 வேதனைகளும் சோதனைகளும் உன் வாழ்வில் அணையாய் சேர்ந்திடலாம் 
 நம்பிக்கை மட்டும் சேர்க்க மறக்காதே !!



ரோஜா என்பது அழகான பூ ! 
   அவ்வளவு அழகான பூ காம்பில் முள் இருக்கும்போது, 
   இவ்வளவு அழகான உங்களுக்கு 
ஏன் என் மேல் கோபம் இருக்க கூடாது  ?


மாணவர்களின் திறமை எங்கே

மாணவர்கள் எங்கே செல்கிறார்கள் ? மாணவர்களின் திறமை எங்கே செல்கிறது ?

  தேர்வு என்பது என்ன ? நமது திறமையை வெளிபடுத்த கிடைத்த ஒரு சந்தர்பம் . அதனை புரிந்து கொல்லாத மாணவ மாணவியர் பக்கத்திலுள்ள தமது நண்பர்களிடம் பதிலை கேட்டு எழுதுகின்றனர் அல்லது அவர்களுக்கே தெரியாமல் பிட் அடிகின்றனர் !  அதன் மூலம் தேர்வில் தேர்ச்சியும் பெறுகின்றனர். இவ்வாறு தேர்ச்சி பெற்று மாணவ மாணவியர் தெரிந்துகொள்வது  என்ன ?

         நகை கடையில் கேமரா உள்ளது , மல்லிகை கடையில் கேமரா உள்ளது. ஏன் பள்ளி கல்லூரிகளில் கேமரா வைக்க கூடாது ? அதனால் அரசுக்கு  செலவு அதிகமாகுமோ ?

      நாளைய சமுதாயமே மாணவர்கள்தான் !  அவர்களை ஏன் ஒழுங்கு முறையில்  கொண்டு செல்ல கூடாது ? (அணைத்து பள்ளிகளையும் சொல்லவில்லை)    மாணவர்களின் ஒழுங்கு முறை மாறுவதற்கு காரணம், அவர்களின் பெற்றோர்கள் பின் தொடரததே காரணம் !

     இன்னும் சில கல்லூரிகளில் மாணவர்கள் உள்நுழையும்போதே, சோதனை பெட்டியில் ரேகை பதிய வேண்டும். வெளியில் வரும்போதும் அதே போல் ரேகை பதிய வேண்டும் . ரேகை பதிந்த உடனே அவர்களின் பெற்றோருக்கு செய்தி (sms ) போய்விடும்.  இது பாராட்டக்கூடிய விஷயம்  பாராட்டுகிறேன் ..

 சில  கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கையின் போது பெற்றோர்கள் வர தேவையில்லை, அதனால் கல்லூரி நிர்வாகமும் பெற்றோரின் சரியான அலைபேசி என்னை வாங்க முடிவதில்லை.   இங்கு, மாணவர்களின் புத்திகூர்மை வேலைசெய்கிறது ! பெற்றோரின் அலைபேசி எண்ணுக்கு பதிலாக இவர்களின் அலைபேசி என்னையே கொடுத்துவிடுகின்றனர். பின்பு பெற்றோருக்கு எப்படி தகவல் செல்லும் ?

        பெற்றோர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது கல்லூரிக்கு சென்று தனது பிள்ளைகளை பார்த்தால் என்ன?   ஆசிரியர்கள் மாணவர்களை தனது பிள்ளை போல் கவனித்துகொள்கிறார்கள், அந்த ஆசிரியர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் !

மாணவர்கள்,  ஆசிரியர்க்கும் பெற்றோருக்கும் ஒத்துழைத்து   தமது நல்ல திறமைகளை வெளிபடிதி நாளைய  சமுதாயத்தை காப்பாயாக...

                                         -  நன்றி -

 

ஒரு பார்வை


நீ பேசாத ஒவ்வொரு நொடியும் வாழ்கிறேன்
    உன்னை நினைத்து
ஒரு பார்வையாவது பாரடி
    எனது உயிரை வளர்பதற்கு...!



பல மணி நேரம் உன்னிடம் பேசியபோதும்
    கிடைக்காத சுகம்,
என்னிடம் பேசி விட்டு செல்லும்போது திரும்பி பார்க்கும்
   ஒரு பார்வையில் கிடைக்குதடி..!! 






எனது காதலை உன்னிடம் சொல்லதெரியாத எனக்கு , 
      உனது காதலை புரிந்து கொள்ள முடிகிறது
             உனது பார்வையால் ...


காதலியே என்னை காதலியே ..!!

- வே.அய்யனார்.-

ஹைக்கூ


விருந்தினை தேடி செல்பவருக்கு தெரியாது 
  
       நான் விருதினை தேடி செல்பவன் என்று ..!!


popular templates download here

குடி குடியை கெடுத்தது

 அய்யோ  என்னை விடுங்கடா,  என்ற அலறல் சத்தம் காட்டுக்குள் கேட்டது 

அன்புள்ள அண்ணன்

  சின்ன வயசில
நான் உன்னை அடிகடி கோபப்பட வைத்தேன், 

நம்பிக்கையோடு செல்

ஆயிரம் கைகளுடன் போருக்கு சென்றாலும் உன்னை காப்பாற்றுவது உன் கைகள்தான், உனக்கு நம்பிக்கை இருந்தால் ஆயிரம் கைகள் உன் பின்னால் வரும். நம்பிக்கையோடு செல் வெற்றியுடன் வருவாய்,                                                

        பயத்துடன் சென்றால்!!.. அந்த வெற்றியே உன்னை கண்டு பயந்து ஓடும்!!!     


முதல் பயணம்


பயணக்கள் பல இருக்கும் போதும் நீங்க சோர்வு அடைய கூடாது, நீங்க ஒரு வெற்றியை நோக்கி செல்கிறீர்கள்.