அன்புள்ள அண்ணன்

  சின்ன வயசில
நான் உன்னை அடிகடி கோபப்பட வைத்தேன், 

   உன்னிடம் இருக்கும் விளையாட்டு பொருள்களை (பழைய என்னை டப்பா )       நான்  வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றினேன்,    உனது புது ஆடைகளை(பள்ளியில் கொடுத்த ட்ரவுசர்)  நான்  வாங்கிக்கொண்டு உன்னை ஏமாற வைத்தேன்.          ஆனால் எனது படிப்பிற்காக நீ படிக்காமல் போனாய்,    குடும்ப   வறுமையால்!!!

   உனக்கு படிக்க விருப்பம் இருந்தும் எனக்காக நீ கட்டிட வேலைக்கு சென்றாய்....  எனது பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் என்னை விட உன்னிடம்தான் அதிகம் சந்தோசத்தை கண்டேன்,  அப்போதுதான் உனது பாசத்தையும் உணர்தேன்...   நீ பட்ட கஷ்டங்களையும் தெரிந்தேன்.       உனது ஆசைக்காக என்னை கட்டிட பொறியாளராக  வேண்டும் என்று கூறினாய், நானும் உனது ஆசையை நிறைவேற்றினேன்.    அதன் பின்பு நமது வீட்டை நாமே கட்டினோம்..!!

சந்தோசமாக இருக்கும் தருணத்தில் 

உனக்கு திருமணம் என்னும் முடுச்சு போட்டு,  நீ என்னை விட்டு வெளிநாடு  சென்றுவிட்டாயே !!!

நான்  தேடும் போது உனது அன்பும் அரவனைப்பும் எனக்கு பக்கத்தில் இருந்து கிடைக்காதா ?? 

2 comments:

  1. வாழ்வில் பெரும்பாலானவர்களுக்கு இப்படிப்பட்ட அண்ணன்கள்தான் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தங்களது கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete