குடி குடியை கெடுத்தது

 அய்யோ  என்னை விடுங்கடா,  என்ற அலறல் சத்தம் காட்டுக்குள் கேட்டது 


இவன் பெயர் குமார், புதுக்கோட்டை மா மன்னர் கல்லூரியில் B.com படித்து கொண்டிருந்தான் , மிகவும் வறுமையான குடும்பம் ஒரு அக்கா , அம்மா மட்டுமே உள்ளார்கள் அப்பா இல்லை. 
 இவனின் அம்மாதான் ரொம்ப கஷ்டப்பட்டு வீட்டு வேலை செஞ்சு  இவனையும் இவுங்க அக்காவையும் வளத்தாங்க, நல்லா படிக்கவும் வச்சாங்க, 
 அனால் இவனுக்கு குடும்ப பொறுப்பே கிடையாது, நல்ல ஊரு சுத்திகிட்டு நண்பர்களோட உல்லாசமா இருப்பான், நம்ம ஹீரோகிட்ட இருக்குர நல்ல விஷயம் இவன் தண்ணி அடிக்க மாட்டான் !

  நண்பர்கள் இவனை கிண்டல் செய்வார்கள் , 
   
   டேய் குமார் ஏன்டா நீ தண்ணி அடிக்க மாட்டின்கிர ?

 எனக்கு வேண்டாம்னா விடுங்கடா, என்னை ஏன் தொந்தரவு பன்றிங்க!

டேய் குமார், "நண்பன்னா எல்லாத்தையும் சேர் பண்ணிக்கினும்ட"

போட கேட்ட விஷயங்கள கத்து கொடுக்குரவன் நண்பனே இல்லை.

 அதான் உங்ககூட உக்காந்து கம்பெனி கொடுக்குரேன்ல, அப்புறம் என்னடா ?


நம்ம ஹீரோவுக்கு தண்ணி அடிகிரதொட விளைவு தெரியும் . ஒரு நாள் இவனும் இவுங்க அம்மாவும் கோவிலுக்கு போயிட்டு வரும் வழியில்தான் ஒரு சம்பவம் நடந்துசு, அதுதான் இவனை தண்ணி அடிக்ககூடாதுன்னு முடிவு செஞ்சுசு.  
 வரும் வழியில ஒரு விபத்து, மிகப்பெரிய விபத்து என்னனா .. அந்த விபத்துல இறந்ததுதான் அவுங்க அப்பா..

 அதுல இருந்துதான் தண்ணி அடிக்கிறது இல்லை . 

அனால் அவுங்க அம்மா கண் கலங்களை, நம்ம பையன் இருக்கான் அவுங்க அக்காவ எப்டியாவது கரை சேத்துருவான்னு நம்பினாங்க .

 தான் பையன் மேல ரொம்பவும் பாசமா இருந்தாங்க, ஆனால் அத புரிஞ்சுக்காத குமார்  விளையாட்டு தனமாவே ஊரு சுத்துவான்.

 (அன்று ஞாயிற்று கிழமை )

தான் பிள்ளைகளுக்காக சந்தைக்கு போய் நல்ல வெடக்கோழிய  வாங்கி வந்து சமசுட்டு ..

 குமார்..
  
 என்னம்மா ...

 எந்திரிடா மணி 10.30 ஆச்சு வா சாப்பிடலாம் 

 போமா எனக்கு தூக்கம் வருது 
  
அம்மாவோட சமையல் இவனை தூங்க விடலை  வாடா வந்து என்னை சாப்டுடானு  சொல்ட்ர மாதிரியே இருந்துசு.   உடனே எழுந்து பக்கத்துல உள்ள வேப்ப மரத்தை தேடினான்  ஒரு குச்சியை ஒடித்து பல்லு விலக்க ஆரமிச்சான்,  தயாரா இருந்த சாப்பாட்டை ஒரு புடி புடிசான் . வழக்கம்போல ஊரு சுத்த கெளம்பிட்டான். 

 மாலையில் வீடு வந்து பாத்து அவன் மனம் பதறினான், அம்மாவும் அக்காவும் அழுது கொண்டிருந்தனர், வெய்யில்ல  சூடு தாங்காத அவுங்க வீடு எரிந்து போனது, 

அம்மாவும் அக்காவும் வீட்டு வேலைக்கி போனதால் வீட்டில் யாரும் இல்லை, தீயை அணைக்க முடியவில்லை. 
மனம் நொந்து இருக்க வீடு இல்லாத நிலையில், அவுங்க வேலை பாத்த வீட்லையே போய் தங்கினாங்க. வருடங்கள் ஓடியது இவனும் B .com  முடிசுட்டான்.

 ஒரு நாள் இவனுக்கு லெட்டர் வந்தது, கல்லூரியில் இருந்து பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்.

 பக்கத்துக்கு வீட்டிலுள்ள சைக்கிலை வாங்கிகொண்டு புதுகோட்டை சென்றான்.  சக நண்பர்களிடம் சந்தோஷமாக இருந்தான். 
விழா முடிந்து நண்பர்களிடம் வரும் வழியில் காட்டிற்குள் சென்று தண்ணி அடிக்க அரமிசாங்க, நம்ம ஹீரோ வழக்கம் போல மறுத்து விட்டான். 
 நண்பர்கள் அவனை ரொம்ப கட்டாய படுத்துனாங்க. 

   வேண்டாம் என்னை விட்ருங்கடா,  
  
    இவனை என்னடா கேக்றது நமகிட்ட பலகிட்டு தண்ணி அடிக்காம இருந்தா நமக்குதான்டா   அசிங்கம் , புடிகடா மடக்குங்கடா 

  அய்யோ  வேண்டாம்ட என்னை விடுங்கடா என்ற சத்தம் காடு முழுவதும் அலறியது....
  சொல்லியும் கேக்காமல் ஊத்தி விட்டார்கள்...  போதையில்  மிதந்தான் 

 என்னடா பூமி சுத்துது ... நான் இவ்ளோ நாள் சூரியன்தான் பூமியை சுத்துசுனு எல்லார்கிட்டையும் சொன்னேன் டா, அதான் மச்சான்  தண்ணி அடிசாதாண்டா உலக நடைமுறை தெரியும்.  போதையில் ஏது  ஏதோ பொலம்பி தீர்த்தார்கள் .

  மச்சான்  போதும்டா  கெளம்புவோம்.. சரி மச்சான் நீ போய்டு வாடா ..

 நண்பர்களிடம் இருந்து விடை பெற்று சைக்கிளை எடுத்து கிளம்பினான் ..
 போதையில் சைக்கில் வேகமாக ஓட்டினான் ... இவனுக்கு வேகம் புரியவில்லை இன்னும் வேகமாக அழுத்தினான் .. 
   எதிரே வந்த லாரியை பார்த்து  எந்த பக்கம் ஒதுன்குரதுனுகூட தெரியாம போதையில்  வேகமாக லாரியின்மீது மோதினான்...  


அந்த இடத்திலையே தனது உயிரை இளந்தான் ...!!

 தனது குடும்பத்தையும் தத்தளிக்க விட்டான்..
  
அவனது மரணம் எல்லோரையும்   அழ வைத்து, சோகத்தில் ஆழ்த்தியது  ...
  
    குடி குடியை கெடுத்து விட்டது ...!!! 



(எனது கதையில் உள்ள குறையை உங்களது கமெண்டில் சொல்லுங்கள் )

                                          வருகைக்கு நன்றி 

2 comments:

  1. சரியாக சொன்னீர்கள் நண்பரே !!

    ReplyDelete