அனுபவம்

ஆயிரம் உறவுகள் நம்மை தேடி வந்தாலும் நமக்கு பிடித்த உறவினை நாம்தான் தேடி செல்ல வேண்டும் !


உன்னை மற்றவர்கள் புரிந்துகொள்ளும்வரை  பொறுமையாய் இரு !
எளிதில் புரிந்து கொள்பவர்க்கு உன்னை பற்றி முழுமையாக தெரியாது !

    
அழகை ரசி, அடைய நினைக்காதே ! 
அழகாக இருப்பவர்களெல்லாம் நல்லவர்களும் கிடையாது !


வறுமைகள் வரும்போது சொந்தங்கள் நெருங்குவதில்லை !
சொந்தங்கள் நெருங்குது என்றால் அங்கெ வறுமைகள் இல்லை ..


உயிர் பிரியும் நேரத்தைவிட
   உண்மையான உறவு   பிரியும் நேரம் கொடுமையானது ! 


சந்தேக சன்னலை பூட்டிவிடு 
  நீ சத்திய பாதையில் நடந்திடு !


காலங்கள் தேய்திடலாம்,
 வேதனைகளும் சோதனைகளும் உன் வாழ்வில் அணையாய் சேர்ந்திடலாம் 
 நம்பிக்கை மட்டும் சேர்க்க மறக்காதே !!



ரோஜா என்பது அழகான பூ ! 
   அவ்வளவு அழகான பூ காம்பில் முள் இருக்கும்போது, 
   இவ்வளவு அழகான உங்களுக்கு 
ஏன் என் மேல் கோபம் இருக்க கூடாது  ?


மாணவர்களின் திறமை எங்கே

மாணவர்கள் எங்கே செல்கிறார்கள் ? மாணவர்களின் திறமை எங்கே செல்கிறது ?

  தேர்வு என்பது என்ன ? நமது திறமையை வெளிபடுத்த கிடைத்த ஒரு சந்தர்பம் . அதனை புரிந்து கொல்லாத மாணவ மாணவியர் பக்கத்திலுள்ள தமது நண்பர்களிடம் பதிலை கேட்டு எழுதுகின்றனர் அல்லது அவர்களுக்கே தெரியாமல் பிட் அடிகின்றனர் !  அதன் மூலம் தேர்வில் தேர்ச்சியும் பெறுகின்றனர். இவ்வாறு தேர்ச்சி பெற்று மாணவ மாணவியர் தெரிந்துகொள்வது  என்ன ?

         நகை கடையில் கேமரா உள்ளது , மல்லிகை கடையில் கேமரா உள்ளது. ஏன் பள்ளி கல்லூரிகளில் கேமரா வைக்க கூடாது ? அதனால் அரசுக்கு  செலவு அதிகமாகுமோ ?

      நாளைய சமுதாயமே மாணவர்கள்தான் !  அவர்களை ஏன் ஒழுங்கு முறையில்  கொண்டு செல்ல கூடாது ? (அணைத்து பள்ளிகளையும் சொல்லவில்லை)    மாணவர்களின் ஒழுங்கு முறை மாறுவதற்கு காரணம், அவர்களின் பெற்றோர்கள் பின் தொடரததே காரணம் !

     இன்னும் சில கல்லூரிகளில் மாணவர்கள் உள்நுழையும்போதே, சோதனை பெட்டியில் ரேகை பதிய வேண்டும். வெளியில் வரும்போதும் அதே போல் ரேகை பதிய வேண்டும் . ரேகை பதிந்த உடனே அவர்களின் பெற்றோருக்கு செய்தி (sms ) போய்விடும்.  இது பாராட்டக்கூடிய விஷயம்  பாராட்டுகிறேன் ..

 சில  கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கையின் போது பெற்றோர்கள் வர தேவையில்லை, அதனால் கல்லூரி நிர்வாகமும் பெற்றோரின் சரியான அலைபேசி என்னை வாங்க முடிவதில்லை.   இங்கு, மாணவர்களின் புத்திகூர்மை வேலைசெய்கிறது ! பெற்றோரின் அலைபேசி எண்ணுக்கு பதிலாக இவர்களின் அலைபேசி என்னையே கொடுத்துவிடுகின்றனர். பின்பு பெற்றோருக்கு எப்படி தகவல் செல்லும் ?

        பெற்றோர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது கல்லூரிக்கு சென்று தனது பிள்ளைகளை பார்த்தால் என்ன?   ஆசிரியர்கள் மாணவர்களை தனது பிள்ளை போல் கவனித்துகொள்கிறார்கள், அந்த ஆசிரியர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் !

மாணவர்கள்,  ஆசிரியர்க்கும் பெற்றோருக்கும் ஒத்துழைத்து   தமது நல்ல திறமைகளை வெளிபடிதி நாளைய  சமுதாயத்தை காப்பாயாக...

                                         -  நன்றி -

 

ஒரு பார்வை


நீ பேசாத ஒவ்வொரு நொடியும் வாழ்கிறேன்
    உன்னை நினைத்து
ஒரு பார்வையாவது பாரடி
    எனது உயிரை வளர்பதற்கு...!



பல மணி நேரம் உன்னிடம் பேசியபோதும்
    கிடைக்காத சுகம்,
என்னிடம் பேசி விட்டு செல்லும்போது திரும்பி பார்க்கும்
   ஒரு பார்வையில் கிடைக்குதடி..!! 






எனது காதலை உன்னிடம் சொல்லதெரியாத எனக்கு , 
      உனது காதலை புரிந்து கொள்ள முடிகிறது
             உனது பார்வையால் ...


காதலியே என்னை காதலியே ..!!

- வே.அய்யனார்.-

ஹைக்கூ


விருந்தினை தேடி செல்பவருக்கு தெரியாது 
  
       நான் விருதினை தேடி செல்பவன் என்று ..!!


popular templates download here

குடி குடியை கெடுத்தது

 அய்யோ  என்னை விடுங்கடா,  என்ற அலறல் சத்தம் காட்டுக்குள் கேட்டது 

அன்புள்ள அண்ணன்

  சின்ன வயசில
நான் உன்னை அடிகடி கோபப்பட வைத்தேன், 

நம்பிக்கையோடு செல்

ஆயிரம் கைகளுடன் போருக்கு சென்றாலும் உன்னை காப்பாற்றுவது உன் கைகள்தான், உனக்கு நம்பிக்கை இருந்தால் ஆயிரம் கைகள் உன் பின்னால் வரும். நம்பிக்கையோடு செல் வெற்றியுடன் வருவாய்,                                                

        பயத்துடன் சென்றால்!!.. அந்த வெற்றியே உன்னை கண்டு பயந்து ஓடும்!!!     


முதல் பயணம்


பயணக்கள் பல இருக்கும் போதும் நீங்க சோர்வு அடைய கூடாது, நீங்க ஒரு வெற்றியை நோக்கி செல்கிறீர்கள்.