மாணவர்களின் திறமை எங்கே

மாணவர்கள் எங்கே செல்கிறார்கள் ? மாணவர்களின் திறமை எங்கே செல்கிறது ?

  தேர்வு என்பது என்ன ? நமது திறமையை வெளிபடுத்த கிடைத்த ஒரு சந்தர்பம் . அதனை புரிந்து கொல்லாத மாணவ மாணவியர் பக்கத்திலுள்ள தமது நண்பர்களிடம் பதிலை கேட்டு எழுதுகின்றனர் அல்லது அவர்களுக்கே தெரியாமல் பிட் அடிகின்றனர் !  அதன் மூலம் தேர்வில் தேர்ச்சியும் பெறுகின்றனர். இவ்வாறு தேர்ச்சி பெற்று மாணவ மாணவியர் தெரிந்துகொள்வது  என்ன ?

         நகை கடையில் கேமரா உள்ளது , மல்லிகை கடையில் கேமரா உள்ளது. ஏன் பள்ளி கல்லூரிகளில் கேமரா வைக்க கூடாது ? அதனால் அரசுக்கு  செலவு அதிகமாகுமோ ?

      நாளைய சமுதாயமே மாணவர்கள்தான் !  அவர்களை ஏன் ஒழுங்கு முறையில்  கொண்டு செல்ல கூடாது ? (அணைத்து பள்ளிகளையும் சொல்லவில்லை)    மாணவர்களின் ஒழுங்கு முறை மாறுவதற்கு காரணம், அவர்களின் பெற்றோர்கள் பின் தொடரததே காரணம் !

     இன்னும் சில கல்லூரிகளில் மாணவர்கள் உள்நுழையும்போதே, சோதனை பெட்டியில் ரேகை பதிய வேண்டும். வெளியில் வரும்போதும் அதே போல் ரேகை பதிய வேண்டும் . ரேகை பதிந்த உடனே அவர்களின் பெற்றோருக்கு செய்தி (sms ) போய்விடும்.  இது பாராட்டக்கூடிய விஷயம்  பாராட்டுகிறேன் ..

 சில  கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கையின் போது பெற்றோர்கள் வர தேவையில்லை, அதனால் கல்லூரி நிர்வாகமும் பெற்றோரின் சரியான அலைபேசி என்னை வாங்க முடிவதில்லை.   இங்கு, மாணவர்களின் புத்திகூர்மை வேலைசெய்கிறது ! பெற்றோரின் அலைபேசி எண்ணுக்கு பதிலாக இவர்களின் அலைபேசி என்னையே கொடுத்துவிடுகின்றனர். பின்பு பெற்றோருக்கு எப்படி தகவல் செல்லும் ?

        பெற்றோர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது கல்லூரிக்கு சென்று தனது பிள்ளைகளை பார்த்தால் என்ன?   ஆசிரியர்கள் மாணவர்களை தனது பிள்ளை போல் கவனித்துகொள்கிறார்கள், அந்த ஆசிரியர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் !

மாணவர்கள்,  ஆசிரியர்க்கும் பெற்றோருக்கும் ஒத்துழைத்து   தமது நல்ல திறமைகளை வெளிபடிதி நாளைய  சமுதாயத்தை காப்பாயாக...

                                         -  நன்றி -

 

2 comments:

  1. சரியாக சொன்னீர்கள் நண்பரே ! எல்லா பெற்றோருக்கும் இது தெரியட்டும்

    ReplyDelete
    Replies
    1. சரிதான் தோழரே ! நன்றி ..

      Delete